சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்கமானது இன்று உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
தற்போதுவரை சுமார் 3,000 வரையானவர்கள் இந்த வைரஸ் தாக்கத்திற்கு பலியாகியுள்ளனர்.
அத்துடன் 60,000 வரையானவர்கள் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்துள்ளது.
இதன்படி கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு தெரிவித்துள்ளது.
முக்கியமாக ஹொங்ஹொங், ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி உலகெங்கிலும் பணியாற்றும் தனது 5,000 வரையான பணியாளர்களையும் எச்சரிக்கையாக இருக்குமாறும் தெரிவித்துள்ளது.
இதேவேளை பேஸ்புக் நிறுவனம் சீனாவில் உள்ள தனது பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கடந்த மாதம் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.