பேஸ்புக் நிறுவனமானது நூற்றுக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் மற்றும் பக்கங்களை நீக்கியது..!!

கடந்த பெப்ரவரி மாதம் பேஸ்புக் நிறுவனமானது நூற்றுக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் மற்றும் பக்கங்களை நீக்கியுள்ளது.

இந்த தகவலை பேஸ்புக் நிறுவனம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இலக்கு வைத்து உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்குகள் மற்றும் பக்கங்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் 37 பேஸ்புக் கணக்குகள், 32 பேஸ்புக் பக்கங்கள், 11 பேஸ்புக் குழுக்கள் மற்றும் 42 இன்ஸ்டாகிராம் கணக்குகள் என்பன அடங்குகின்றது.

இக் கணக்குகள் அனைத்தும் குறித்த இரு நாடுகளிலும் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்தவையாகும்.

எனினும் மக்களை தவறாக வழிநடுத்தும் வகையில் விளம்பரங்களை மேற்கொண்டமையினால் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.