லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் போய் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இப்படத்திற்கு பிறகு விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அதற்கு பதிலளிக்க விதமாக விஜய்யின் 65 படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்க போகிறார் என்று சில தகவல்கள் வெளியானது. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால், தற்போது சுதா கொங்கரா இப்படத்தை இயக்க வில்லை என்று தகவ்கள் கசிந்துள்ளது. இந்த செய்தியால் தற்போது ரசிகர்களிடேயே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் தற்போது இப்படத்தை மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க போகிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சர்கார் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.