நடிகை வரலட்சுமி சரத்குமாரை பொறுத்த வரை, அவர் தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை படபடவென பேசும் குணம் கொண்டவர்.
இந்நிலையில் இவர் நடிப்பில், அடுத்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் ‘வெல்வெட் நகரம்’. இந்த படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் வரலட்சுமி.
இதனால் இந்த படத்தில் புரமோஷன் படு வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு, இயக்குனருடன் சேர்ந்து வரலட்சுமி பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பேசிய அவர், படம் பற்றி மட்டுமின்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
நடிகை ராதிகாவை பற்றி பேசிய அவர், ராதிகாவை பொறுத்தவரை அவர் தன்னுடைய அம்மா அல்ல, அப்பாவின் இரண்டாவது மனைவி, அதனால் அவரை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன்.
ஒவ்வொருவருக்கும் தாய் என்றால் ஒருவராக தான் இருக்க முடியும், என்னைப் பொறுத்தவரை எனக்கு எல்லாமே சாயா தான். ராதிகா எப்படி தன்னுடைய தந்தை மீது அதிக மரியாதை வைத்திருக்கிறாரோ, அதேபோல் நானும் அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஒருபோது அவரை நான் வெறுக்கவில்லை. எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ராதிகாவிடம் ஒரு செய்தியாளராக என்ன கேள்வி கேட்பீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அடுத்த டூர் எப்போ போவோம் என கேட்பேன் என்று ஜாலியாக பதிலளித்துள்ளார் வரலட்சுமி.