கொரோனாவா?பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை மற்றும் மகன்!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பதுளை வைத்தியசாலையில் இன்று அதிகாலை இருவர் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

குறித்த நபர்கள் பண்டாரவளை, ஹீல்ஓயா அம்பிட்டிய என்கிற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 27ஆம் திகதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள மகனுக்கு 7 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பதுளை வைத்தியசாலையின் விசேட வார்ட் அறையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.