சென்சேஷன் இயக்குனருடன் கைக்கோர்க்கின்றாரா துருவ் விக்ரம்?

தமிழ் சினிமாவில் ஒரு இளம் நடிகருக்கு தான் தற்போது மிகப்பெரிய பஞ்சம். அந்த வகையில் சமீபத்தில் ஆதித்ய வர்மா மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் துருவ் விக்ரம்.

இவர் சீயான் விக்ரம் அவர்களின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் துருவ் விக்ரமிற்கு என்று இளம் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகின்றது.

அதிலும் இவருக்கு பெண்கள் ரசிகைகள் மிக அதிகம், இந்நிலையில் துருவ் அடுத்து என்ன படம் நடிக்கின்றார் என்பது தான் பலருக்கும் இருக்கும் கேள்வி.

அந்த வகையில் துருவ் அடுத்து எந்த படமும் கமிட் ஆகாமல் அமெரிக்காவில் படிக்க சென்றுவிட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது துருவ் மீண்டும் நடிக்க வந்துவிட்டார், இவர் அடுத்து பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணையவுள்ளதாக பிரபல வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து நம் தளத்திலேயே நேற்று தெரிவித்து இருந்தோம், ஆனால், நமக்கு கிடைத்த தகவல்படி துருவ் எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லையாம்.

ஆனால், பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவது உண்மை தானாம்.

அதோடு துருவ்வும் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் எடுத்திருந்தார், இதனால், கண்டிப்பாக விரைவில் இரண்டாவது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.