சித்தி-2விற்கு வந்த சோதனை..!!

ராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று.

இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கியதை விட சீரியலில் நடித்து பெயர் வாங்கியது தான் அதிகம், அந்த வகையில் சித்தி சீரியல் இவரை பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமாக்கியது.

மேலும், அதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து டிஆர்பி-யில் நம்பர் 1-ஆக இருந்து வந்தார்.

ஆனால், கடைசியாக இவர் நடித்த சீரியல் ஒன்று டிஆர்பி-யில் பெரிய ரீச் இல்லாததால், அந்த சீரியலை நிறுத்தினார்.

வேறு சேனலுக்கு சென்று கோடிஸ்வரி என்ற நிகழ்ச்சியை நடத்தினார், அந்த நிகழ்ச்சி இவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது.

அதை தொடர்ந்து தற்போது மீண்டும் சீரியலில் களம் இறங்கியுள்ளார், சித்தி-2 என்ற சீரியலில் இவர் நடித்து வருகின்றார்.

முதல் வாரம் டிஆர்பி-யில் டாப் 5ல் இருந்த இந்த சீரியல், தற்போது டாப் 5-யை விட்டு வெளியேறிவிட்டது.

இது எல்லோருக்கும் பெரிய ஷாக் தான், மேலும் செம்பருத்தி சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது.