முன்னணி இயக்குனர் மணிரத்தனம் தனது கனவு படமாக இயக்கி வருவது தான் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதலாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் மிக சிறப்பான முறையில் எடுத்து முடிக்கப்பட்டது.
இந்த முதலாம் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வந்ததாக தகவல்கள் வெளியானது.
இப்படத்தில் நடிகர் விக்ரம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் சில தகவல்கள் கசிந்தது.
அண்மையில் இவர் பேட்டி அளித்த போது “நீங்க இந்த படத்தில் நெகடிவ் ரோல் தான நடிக்கிறீங்களா” என்று தொகுப்பாளர் கேட்க. அதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம் பிரபு “இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்” என்று கேள்வியை மழுப்பும் விதமாக பதிலளித்தார்.
மேலும் பேசிய இவர் “இப்படத்தில் எனக்கு தெரிந்த வரை 27 பேர் நடித்து வருகிறார்கள்” என்றும் கூறினார்.