அருண் விஜய்யின் தடம் ரீமேக் ஹீரோ இவர் தானாம்!

அருண் விஜய்யின் நடிப்பில் அண்மையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதோடு படம் கொஞ்சம் நஷ்டமடைந்தது என சொல்லப்பட்டது.

தொடர் வெற்றி கொடுத்து வந்த அருண் விஜய்க்கும் இப்படம் சறுக்கலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் இப்படத்திற்கு முன் வந்த தடம் படம் அவருக்கு ஹிட் கொடுத்தது. தெலுங்கில் இப்படம் ரெட் என ரீமேக் செய்யப்பட்டு வரும் ஏப்ரல் 9 ல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஹிந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாம். சித்தார்த் மல்ஹோத்ரா இப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அறிமுக இயக்குனர் வர்தான் கெட்கர் இப்படத்தை இயக்க படம் வரும் மே மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

மேலும் இவ்வருடம் நவம்பர் 20 ல் வெளியாகவுள்ளதாம்.