ரகசியமாக நடத்தப்படும் ரஜினியின் திட்டம்! அடுத்தகட்ட நகர்வு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2021 ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என முன்பே கூறிவிட்டார். இந்நிலையில் அவரின் கட்சியின் பெயர் அடுத்த மாதம் அறிவிக்கவுள்ளாராம். இதற்கான வேலைகளின் அவரின் மன்ற பிரமுகர்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய அமைப்புகளுடன் திரை மறைவில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

அண்மையில் அவர் டில்லி வன்முறைக்கு மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம் என கோபத்துடன் பேசியிருந்தார்.

இந்நிலையில் அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எழுந்துள்ள மக்களின் அச்சத்தை போக்க தயார் என கூறினார். மேலும் இஸ்லாமிய அமைப்புகள், மத குருமார்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கவுள்ளாராம்.