இன்று பிறந்தநாள் காணும் வரலக்ஷ்மியை பற்றி ஒரு சிறு தகவல். சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்தவர்தான் நடிகை வரலக்ஷ்மி. இவர் முறைப்படி சல்சா நடனம் கற்றவர், தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.
தற்போது நடித்தால் ஹீரோயின் மட்டும்தான் இல்லாமல், துணை கதாபாத்திரத்துக்கு ரோல்களில் தனக்கு பிடித்திருந்தால் கூட அதில் நடித்து வருகிறார். இவர் வில்லியாக நடித்த சமீபத்திய படங்கள் இவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. சண்டக்கோழி 2 , சர்கார் அதற்கு சிறந்த உதாரணம்.
இந்நிலையில் இவர் திரையுலகில் கால்பதித்து 8 வருடங்கள் ஆன நிலையில் இவருக்கு 35 வயது ஆகிறது என்று தெரியவந்துள்ளது.