சட்டவிரேதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 11 இந்திய பிரஜைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் தங்கம் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.