இலங்கையின் தென் பகுதியில் உள்ள சர்வதேச கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ள விடயம்!

இலங்கையின் தென் பகுதியில் உள்ள சர்வதேச கடற்கரைப் பகுதியிலிருந்து கடந்த சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை இன்று காலை திக்கோவிட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு பொறுப்பெடுக்கப்பட்டுள்ள 330 கிலோகிராமுக்கு அதிகமாக ஹெரோயின் போதைப்பொருட்கள் மற்றும் 50 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருட்களுடன் 5 சந்தேக நபர்களுமே இன்று இவ்வாறு மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட உள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை போதைப்பொருள் சிறப்பு பிரிவினருக்கு கிடைத்த உளவுத்துறையின் தகவலுக்கு அமைய, சந்தேகமான முறையில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலை கடற்படையினர் திடீர் சோதனைக்கு உட்படுத்திய போதே குறித்த சந்தேக நபர்களுடன் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.