எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன 120 வரையான ஆசனங்களை கைப்பற்றுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ச.
பத்தரமுல்லவிலுள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் கட்சி செயற்பாட்டாளர்கள், கூட்டு கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.
நாட்டிலுள்ள இளைய கட்சிகளில் ஒன்றான பெரமுன, பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுமென பசில் குறிப்பிட்டார். 113 முதல் 120 வரையான ஆசனங்களை தமது கட்சி கைப்பற்றுமென குறிப்பிட்டார்.