தட்டிக்கேட்ட பிக்பாஸ் ஜூலியை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்..

ஜல்லிகட்டு போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் ஜூலி. அதன்பின் மக்கள் மனதில் பிடித்த இடத்தினை பிக்பாஸ் மூலம் இழந்தார். பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில பிரச்சனையில் தலையிட்டு எரிச்சலூட்டினார்.

இதனால் அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் வெறுப்பையே திணித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜூலி சில படங்களிலும், விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். தன்னை அனைவரும் இப்படி பேசுவதை காதில் வாங்காமல் இருக்கிறார்.

டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் பிக்பாஸ் ஜூலி சமிபத்தில் ஒரு வீடியோ பதிவினை பகிர்ந்துள்ளார். முஸ்லீம் நபரை ஜெய்ஸ்ரீராம் என்று கூறச்சொல்லி வற்புறுத்தும் வீடியோவை பதிவிட்டு இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

இதை சில இணையவாசிகள் ஆதரவாகவும், சிலர் கிண்டலடித்தும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.