சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி நடித்து கொண்டு இருக்கும் படம் அண்ணாத்த.
இப்படத்தில் பல வருடன் கழித்து நடிகை மீனா மற்றும் குஷ்பூ நடித்து வருகிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை அடைந்தது. இதன்பின், ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருவது இப்படத்தின் First லுக்.
மேலும் இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று சில தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் தெலுங்கு ஹீரோ கோபி சந்து இணைந்துள்ளதாகவும் இவர் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவலகள் கசிந்துள்ளது.
இவரை ஜெயம் ரவி நடித்து வெளிவந்த ஜெயம் படத்தில் வில்லனாக நாம் அனைவரும் பார்த்திருப்போம்.