இந்த நடிகருடன் நான் பெரிய பட்ஜெட்டில் கூட நடிக்க மாட்டேன்.. பிரபல நடிகர்…..

மலையாள சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானவர் தான் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான். தன் தந்தையின் இடத்தினை சில ஆண்டுகளிலேயே நடித்த படங்களின் வெற்றியால் காப்பாற்றி வருகிறார்.

தமிழில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமாகி அனைத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான தமிழ் படம் தான் கண்ணும் கண்ணும் கொல்லையடித்தால். படம் வெளியாகி தமிழ் சினிமாவில் நல்ல இடத்தினை பெற்றுத்தந்துள்ளது துல்கருக்கு.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டியளித்துள்ளார். தொகுப்பாளரின் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு நடிகர் அரசியல் வந்தால் ஆதரிப்பேன், பெரிய பட்ஜெட்டில் படம் அவருடன் கிடைத்தால் நடிக்க மாட்டேன் என்றால் அது யார் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு நடிகர் துல்கர் அது நடிகர் அஜித்துடன் தான் என்று கூறியுள்ளார். ஏனென்றால் படத்தில் அவரை மட்டும் தான் அனைவரும் பார்ப்பார்கள் என்னை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று கூறி நடிகர் அஜித்தினை புகழ்ந்து தள்ளியுள்ளார்.