பிரபல தொகுப்பாளி திவ்யதர்ஷினி நடிகைகளுக்கே சவால் விடும் அளவு போட்டோசூட் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
ஒரு நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை போரடிக்காமல் கொண்டு செல்லும் மந்திரத்தை திவ்யதர்ஷினிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். திவ்யதர்ஷினி எப்போதும் நகைச்சுவையான துள்ளல் பேசினால் ரசிகர்களை பக்கம் இழுத்தவர்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் மக்கள் வழங்கி உள்ளார்கள்.
இவர் தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். இவரை பெரும்பாலும் டிடி என்றுதான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள்.
இதேவேளை, சினிமாவில் உள்ள ஒரு சில பிரபலங்களே டிடி இடம் ஆட்டோகிராப் வாங்கி, புகைப்படம் எடுத்து உள்ளார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.
இந்நிலையில், நடிகைகளுக்கே சவால் விடுக்கும் அளவு போட்டோசூட் செய்துள்ளார். குறித்த புகைப்படத்தினை பார்த்த தமிழ் ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.