தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் சிறு கதாபாத்திரத்தின் மூலம் நடித்து நட்சத்திரங்கள் பட்டியலை பிடித்தார். அதன்பின் நடிகர் விஜய் சேதுபதியின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் குமுதா என்ற பெயரை பெற்று பிரபலமானார்.
அதன்பின் அடுத்தடுத்து படங்கள் வெளியான நிலையில் பெரிய வெற்றியை தராமல் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. இதனால் மாடலிங், போட்டோஹுட் என்று இருக்கும் நந்திதா தற்போது டிக்டாக் பக்கம் திரும்பியுள்ளார்.
சமீபத்தில் ஆங்கில பாடலுக்கு டிக்டாக் செய்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு ஒரு ரசிகர் இவ ஒரு பைத்தியம், பட வாய்ப்புகள் இல்லாமல் இப்படி பண்ணிட்டு இருக்கா என்று கூறி அந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ளார்.
இதை பார்த்த நந்திதா போடா லூசு என்று கூறி ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு முன்பாக ரசிகர் ஒருவர் ஆபாசமாக மெசெஜ் செய்ததையும் இப்படி செய்திருக்கிறார்.