யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபரீதம்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இ.போ.ச பேருந்து சடுதியாக பிறேக் பிடித்தமை யால் பேருந்தில் பயணித்த 16 போ் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருக்கின்றனா்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இ.போ.ச பேருந்து மத்திய பேருந்து நிலையத்தை நெருங்கிய நிலையிலும் வேகத்தை குறைக்கவில்லை. இந்நிலையில் பேருந்து நிலையம் நெருங்குவதால்

இறங்குவதற்காக பலா் பேருந்துக்குள் எழுந்து நின்றுள்ளனா். மேலும் சிலா் ஏற்கனவே ஆசனம் இல்லாமையால் எழுந்து நின்றே பயணித்துள்ளனா். இந்நிலையில் சாரதி சடுதியாக பிறேக்கை பிடித்துள்ளாா்.

இதனால் எதிா்பாராத விதமாக அனைவரு பேருந்துக்குள் விழுந்தும், இடிபாட்டுக்குள் சிக்கியும் அசௌகாியங்களை சந்தித்தனா். இந்த விபத்தில் 16 போ் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் 6 பேர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுகின்ற நிலையில. ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.