இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் ஆகும்.
80 சதவீதத்திற்கும் அதிகமான கைப்பேசிகள் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samsung, Xiaomi, Oppo, Vivo, Realme, Google உட்பட மேலும் பல நிறுவனங்கள் அன்ரோயிட் கைப்பேசிகளை வடிவமைத்து வழங்குகின்றன.
இவற்றில் சாம்சுங் நிறுவனத்தின் Galaxy 10 ஸ்மார்ட் கைப்பேசியானது உலகில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட அன்ரோயிட் கைப்பேசியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் சுமார் 30 மில்லியன் Galaxy 10 கைப்பேசிகள் உலகெங்கிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Omdia எனும் ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை Galaxy 30 கைப்பேசியானது அதிகம் விற்பனையான கைப்பேசிகள் வரிசையில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளது.