ஏனைய நிறுவனங்களினை விடவும் ஒரு வருடத்தில் அதிகமான கைப்பேசி வகைகளை அறிமுகம் செய்வதில் சாம்சுங் முன்னணியில் திகழ்கின்றது.
இந்நிறுவனம் தற்போது மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
Galaxy A21 எனும் குறித்த கைப்பேசியானது HD+ AMOLED திரையினைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் திரையின் அளவு தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.
எனினும் Samsung Exynos 7904 mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீடித்து உழைக்கக்கூடிய 4,000mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.
ஆனால் கமெராக்கள் மற்றும் விலை தொடர்பான விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.