இந்தியாவில் மனைவியை பழிவாங்க பெற்ற 3 மகள்களை ஏரியில் தள்ளி கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் தாட்கோலி கிராமத்தை சேர்ந்தவர் பயாஸ். இவருக்கு திருமணமாகி 4 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
சூதாட்டம், மதுவுக்கு அடிமையாக இருந்த பயாஸ் தனது மனைவியிடம் பணம் கேட்டு நச்சரித்ததாக தெரிகிறது.
அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பயாஸ், மனைவியை பழிவாங்க கொடூர முடிவை எடுத்தார்.
அதன்படி தனது மகள்கள் மூவரை அங்குள்ள ஏரிக்கு அழைத்து சென்று நீரில் தூக்கிப்போட்டு கொன்றுள்ளார்.
இதில் 10 வயதுடைய அப்பியா, ஒன்பது வயதுடைய மஹீம், 7 வயதுடைய ஷோயா ஆகியோர் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து ஊர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சிறுமிகளின் உடல்களை பொலிசார் கைப்பற்றினார்கள்.
மகள்களின் சடலங்களை பார்த்து தாய் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக உள்ள பயாஸை தேடி வருகின்றனர்.