தங்கம் விலை 33 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக 1,900 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை இன்று கிராமுக்கு 13ரூபாயும் ,சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து , 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.4,207 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.33656 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1900 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.4,418 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,344 விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு 50.50 காசுகளாகவும், கிலோவுக்கு ரூ.50,500ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.