சீன நாட்டில் தலைநகரான உகானை கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. அசுர வேகத்தில் இந்த வைரஸ் தாக்கமானது பரவிக்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் 25 க்கும் மேற்பட்ட நாடுகளின் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளுக்கு நாள் உயிரிழந்து வருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவ வாய்ப்புள்ள உலக நாடுகளின் பட்டியலில் 17 ஆவது இடத்தில் உள்ளது.
சீனாவின் உகான் நகரில் இயங்கி வரும் மருத்துவமனைகளில் நோயாளிகள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், தற்போது வரை 3100க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகியுள்ளனர் என்றும் 80,300 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரையில் இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு சுற்றலா வந்த 16 பயணிகள் உட்பட 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த இரண்டு பேரும் தற்போது மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலை மீறி வெளியே சென்ற இரண்டு பேரும் மீண்டும் அழைத்து வரப்பட்டு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி அங்குள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை ரத்து செய்யபட்டுள்ளது.