பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் பலருக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் பிடித்தமான தொகுப்பாளினி.
மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி. இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது.
இவர், சினிமா துறையில் வெற்றி பெற்றாலும், அவர் காதலித்து திருமணம் செய்த கணவரை சில மாதங்களிலேயே விவாகரத்து செய்தார். இதற்கு டிடி அடிக்கடி இரவு பார்ட்டிகளுக்கு செல்வதும், ஆ ண் நண்பர்களுடன் சுற்றுவதே காரணம் என்று தகவல்கள் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், Relationship என்பது இரண்டு நபர் சம்மந்தப்பட்ட விஷயம், சில நேரங்களில் அது உடையலாம்.
இதனால் நிச்சயம் காயம் ஏற்படும், அதிலிருந்து மீண்டு வர வேண்டும், அவங்களுக்கு All The Best சொல்லிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விடணும்.
கடைசியாக ஒரு Message அனுப்புனேன், அவ்வளவு தான்.. என்னுடைய இந்த வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.