இந்தியாவின் பெயரை நாசப்படுத்திய இளைஞர்.!

மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருக்கும் 23 வயது இந்திய இளைஞர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சச்சின் அஜீ பாஸ்கர் என்ற அந்த 23 வயது இளைஞர் அதிகபட்ச ஆயுள் தண்டனையை பெறுகின்றார். தன்னுடைய குற்றத்தை அவர் அமெரிக்க மூத்த மாவட்ட நீதிபதி முன்பு ஒப்புக் கொண்டு இருக்கின்றார்.

இந்த குற்றத்திற்கான குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகள் ஆகும் அதிகபட்சம் 250000 டாலர் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்ற பிரபல அமெரிக்க வழக்கறிஞர் தெரிவிக்கின்றார்.

பாலியல் செயலில் ஈடுபடும் நோக்கத்திற்காக இவர் பதினொரு வயது சிறுமி உடன் மின்னஞ்சலை பயன்படுத்திய தொடர்பு கொண்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தகவல் தொடர்புகளின் மூலம் இந்திய இளைஞரான பாஸ்கர் பாதிக்கப்பட்ட சிறுமியை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தன்னுடன் பாலியல் செயலில் ஈடுபட தூண்டியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.