நியூயார்க் நகரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்..!!!

நியூயார்க் நகரில் உள்ள புரூக்லி பகுதியில் சிறுமியொருவர் காலணிகள் மற்றும் அலைபேசிக்காக இளைஞர்களால் கொடூரமாக தாக்கப்படும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் புரூக்லி நகர் உள்ளது. இந்த நகரில் 15 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார்.

இவர் கடந்த வியாழக்கிழமை மாலை சுமார் 4.10 மணியளவில் கிரவுன் ஹைட்ஸி அவென்யூ பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த சுமார் 10 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல், சிறுமியை சற்றும் எதிர்பாராத விதத்தில் தாக்கியுள்ளது.

முதலில் ஒருவன் வந்து தாக்கும் போது சிறுமி அவனை தாக்கி தப்பிக்க முயற்சிக்கவே, மளமளவென சுமார் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறுமியை சரமாரியாக தாக்கி அவரது வயிற்று பகுதியில் எட்டி உதைத்துள்ளனர். வலிபொறுக்க முடியாத சிறுமி அப்படியே செய்வதறியாது முடங்கவே, அவரது காலனி மற்றும் அலைபேசி, கிரெட் கார்டுகள் போன்றவற்றை திருடிவிட்டு கும்பல் தப்பி சென்றுள்ளது. இந்த கொடூர தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சிறுமியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் சிறுமி தாக்கப்பட்டது தொடர்பான விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.