தேங்காய் எண்ணெய் குடிப்பதால் உடல் எடையை குறையும் ;’ எப்படி தெரியுமா?

நமது அன்றாட சமையலுக்கு தாளிக்க, பொரிக்க பயன்படும் ஒரு அத்தியாவசிய பொருட்களில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய்.

தேங்காய் எண்ணெயில் பல அற்புதமான மருத்துவகுணங்கள் நிறைந்திருப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே. அதில் குறிப்பாக இது எடை இழப்பை ஊக்குவிக்கும் நன்மைகளால் நிரம்பியிருக்கின்றது.

ஏனெனில் தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான பசியின்மை தடுப்பானாகும். ஆதலால், இது மற்ற சமையல் எண்ணெய்கள் இல்லாத வகையில் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருப்பதற்கான மற்றொரு காரணமாக அமைகின்றது.

அந்தவகையில் தேங்காய் எண்ணெய் உடல் எடையை எப்படி குறைக்கும்? என்று இங்கு பார்த்து தெரிந்து கொள்வோம்.

எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும்?

ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொள்வதன் மூலம் தொடங்கவும்.

இதனை தொடர்ந்து தினமும் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி வரை மட்டுமே நீங்கள் தேங்காய் எண்ணெயை பருக வேண்டும்.

நன்மைகள் என்ன?
  • தேங்காய் எண்ணெய் உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மற்ற எண்ணெயைப் போலவே, தேங்காய் எண்ணெயிலும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன.
  • தேங்காய் எண்ணெய் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது. ஆதலால், தேங்காய் எண்ணெயை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • தேங்காய் எண்ணெய் உள்ள எம்.சி.டி எண்ணெய் நீண்ட காலத்திற்கு எடை இழப்பை நிர்வகிக்க உதவும் என்பதையும் குறிக்கிறது.
உணவுடன் வேறு எப்படி சேரத்து கொள்ளலாம்?
  • ஒவ்வொரு நாளும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உட்கொள்வது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கிறது. எடைக்கு பங்களிக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
  • தேங்காய் எண்ணெய் காபி பசி ஹார்மோனின் உற்பத்தியை குறைவாக்குகிறது. மேலும், செரிமானத்தை மெதுவாக்குகிறது. உங்களை குறைவாக சாப்பிடச் செய்கிறது. அதே நேரத்தில் இரத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
  • ஒவ்வொரு அரை கப் அரிசிக்கும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை கொதிக்கும் நீரில் சேர்த்து அதனை சாப்பிடலாம். இது உங்கள் உடல் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை 50 முதல் 60% வரை குறைக்கக்கூடும்.
  • திரவ தேங்காய் எண்ணெயை சாலட் ரெசிபிகளிலோ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்டும் உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். இது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து அதிகரிப்பை அதிகரிக்க உதவுகிறது.
முக்கிய குறிப்பு

சில சமயங்களில் தேங்காய் எண்ணெயில் உள்ள கலோரிகள், எடை அதிகரிப்பிற்கும் வழிவகுக்கும். ஆதலால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, சரியான அளவில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால், விரைவில் எடை குறைய வாய்ப்புள்ளது.