கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் 5 பேரையே கொரானா தாக்கியுள்ளது.
இந்த தகவலை கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உறுதி செய்துள்ளார்.
இத்தாலியில் இருந்து திரும்பிய 3 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் அவர்கள் மூலமாக மேலும் 2 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் தான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிக்கப்பட்ட மூன்று பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு , அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் அம்மாநிலத்தை சேர்ந்த மக்களை கொரோனா தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.