பூமிக்கு மிக அருகில் 4 கி.மீ. பருமன் கொண்ட விண்கல் ஒன்று அடுத்த மாதம் பூமியை கடக்க இருப்பதாக நாசா கூறியுள்ளது.
4 கிலோ மீட்டர் பருமன் கொண்ட விண்கல் ஒன்று வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதி, பூமிக்கு வெகு நெருக்கமாக கடக்க இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
இருப்பினும் இந்த விண்கலானது புவியின் ஈர்ப்புக்குள் சிக்காமல் கடந்து சென்று விடும் என்றும், எனவே, இதன் காரணமாக மனிதர்களுக்கும், பூமிக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாது என்றும் நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தற்பொழுது 31 ஆயிரத்து 320 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கி வந்து கொண்டிருப்பதாக கணிக்கப்படுகின்றது. புவியின் ஈர்ப்புக்குள் இந்த விண்கல் சிக்கும் பட்சத்தில் பூமியின் மீது மோதி பாதிப்புகளை ஏற்படுத்துமா என்று பொதுமக்கள் பலரும் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.