விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.
இவர், அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானதை தொடர்ந்து, அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது, தொகுத்து வழங்குவது என்று கடும் பிஸியாக இருந்து வருகிறார். மேலும், சினிமாவில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து, சமீபத்தில் தான் அவருக்கு குழந்தை பிறந்தது. அழகிய குடும்ப புகைப்படத்தை நிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், உலக மகளீர் தினத்தை முன்னிட்டு, நிகழ்ச்சிக்காக அறந்தாங்கி நிஷாவின் அம்மா செய்தியாளர் ஒருவரின் நேர்காணலில் பேசியிருந்தார்.
அப்போது பேசிய அவர், ‘என் மகளை பெண் பார்க்க வந்தவர்கள் பெண் கருப்பாக இருக்கிறாள் கூறி என் மனதை மிகவும் கவலையடைய வைத்தார்கள்’ என்று கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.