இணையதளங்களில் உள்ள செயலிகளில் பிரபலங்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறாக பல மோசடிகள் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி, பெண்களிடம் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவின் பெயரில், தெலுங்கானா மாநிலத்தை சார்ந்த மர்ம நபரொருவர் போலியான முகநூல் கணக்கை துவங்கியுள்ளார். மேலும், இதன் மூலமாக பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். துவக்கத்தில் நடிகர் போல பேசி வந்த மர்ம நபர் பின்னர் ஆபாசமாக பேசி வந்துள்ளான்.
மேலும், இந்த விஷயம் தொடர்பான தகவல் விஜய் தேவரகொண்டாவின் நண்பரின் மூலமாக வெளியே வரவே, இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தேவரகொண்டா விசாரணை செய்கையில், இவரின் மேலாளர் உதவியுடன் ஹேமா என்ற பெயரில் மாமா நபர் சாட்டிங் செய்தது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதன்பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் காவல் துறையினர், பெண்ணொருவரின் உதவியுடன் முகநூல் சாட்டிங்கை வைத்தே சித்ராபதிற்கு அழைத்து வந்து கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை கைதான நபரிடம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.