காதலிக்காக கத்திக்குத்து வாங்கிய காதலன்..!! நடந்தது என்ன ??

ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் சைவ முத்தையா தெருவைச் சேர்ந்த சுகுமார் என்ற 23 வயது வாலிபர் ஒரு பெண்ணை காதலித்த காரணத்தால் அவருடைய உறவினரால் கத்தியால் குத்தப்பட்டு உள்ளார்.

சுகுமார் என்பவர் உணவு விநியோகிக்கும் நபராக பணிபுரிந்து வருகின்றார். அவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஒத்துழைக்காமல், எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதன் காரணமாக பெண்வீட்டார் புதன்கிழமை சுகுமாரையும், அவரது குடும்பத்தினரையும் கடுமையாக அவரது வீட்டிற்கே சென்று தாக்கி இருக்கின்றனர்.

சுகுமார் தாக்கப்பட்டாலும் இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்கவில்லை. இதுபோல, மறுநாள் மீண்டும் வேலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சுகுமாரை பெரியார் சிலை அருகே வைத்து ஒரு மர்ம கும்பல் தடுத்து நிறுத்தியது. பின்னர் சுகுமாரை சிலர் பிடித்துக்கொள்ள பெண்ணின் உறவினரான ராஜேஷ் என்பவர் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றார்.

அவர் குத்தப்பட்ட சம்பவம் சுகுமாரின் நண்பர்களுக்கு தகவல் கிடைக்க அவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் கத்தியால் குத்திய ராஜேசை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலில் வைத்து இருக்கின்றனர்.