ஆண்களே ஸ்டைலிஷான தோற்றத்தால் அனைவரையும் கவர வேண்டுமா.?

அழகு பராமரிப்பு என்பது பெண்களுக்கு மட்டும் உரியது அல்ல. ஆண்களும் தங்கள் அழகை பாதுகாப்பது அவசியம். அது அழகு என்பதைத் தாண்டி சுயபராமரிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பார்லர்/பார்பர் ஷாப் செல்லுங்கள்:

மாதம் ஒரு முறை பார்லர் செல்லுங்கள். முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள், இறந்த செல்களை நீக்க ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள். பார்பர் ஷாப் சென்று உங்கள் முடியை அடிக்கடி ட்ரிம் செய்யுங்கள்.

ஸ்க்ரப் : 

வீட்டிலேயே சில ஸ்க்ரப் டிப்ஸ் பின்பற்றலாம். குறைந்தது சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவினால் கூட போதுமானது.

நக பராமரிப்பு : 

அடிக்கடி உங்கள் நகங்களை வெட்டுங்கள். அழுக்குகள் சேராமல் கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் கை , கால்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் பெடிகியூர், மனிகியூர் செல்லலாம்.

தலைமுடி பராமரிப்பு : 

தலைமுடி வெட்டுவதோடு முடித்துக்கொள்ளாமல், அழுக்குகள் இல்லாமல், பொடுகு இல்லாமல் பராமரிப்பதும் அவசியம். குறிப்பாக பெண்கள் ஆண்களிடம் ரசிக்கும் விஷயங்களில் முடியும் ஒன்று. எனவே தலைக்கு அடிக்கடி குளியுங்கள். நறுமணம் மிக்க ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னர் கட்டாயம் பயன்படுத்துங்கள்.

உடை: 

உடை விஷயத்திலும் அதிக கவனம் அவசியம். எல்லாவற்றையும் சரியாக செய்துவிட்டு ஆடை விஷயத்தில் கோட்டைவிட்டுவிடாதீர்கள். குறிப்பாக ஃபேஷன் அப்டேட்டுகளை விரல் நுனியில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த டிரெண்டுற்கு ஏற்ப உங்களையும் அப்டேட் செய்துகொள்ளுங்கள். வாட்ச், ஷூ என அதற்கு ஏற்ற அணிகலன்களையும் பயன்படுத்துங்கள்.