இப்படிலாம் நீங்க இருந்தா, அடுத்தக்கட்டம் பிரேக்கப் தான்.! ஆண்களே., உஷார்.!

பின்வரும் விஷயங்களை எல்லாம் செய்தால் அல்லது உங்களிடம் இப்படிப்பட்ட குணம் இருந்தால் உங்கள் காதலி அல்லது மனைவி உங்கள் உடனான உறவை முடித்துக் கொள்வார்கள். எந்த மாதிரியான விஷயங்களால் உறவு முறிவு ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தவிருங்கள்.

அசுத்தமாக இருக்கும் ஆண்களை கண்டால், பெண்களுக்கு எரிச்சலாக வரும். அவர்களை மிகவும் அருவருக்கத்தக்கவர்களாக பெண்கள் பார்ப்பனர். இதில் முதலிடம் பிடிப்பது நீங்கள் அணிந்திருக்கும் ஆடை உள்ளிட்ட விஷயங்கள் தான்.

அடுத்ததாக கெட்ட வார்த்தை பேசும் ஆண்களை பெண்கள் விரும்பமாட்டார்கள். ஏனென்றால், இப்படிப்பட்ட குணம் இருக்கும் ஆண் சிறு சிறு விஷயங்களுக்கும் கெட்ட வார்த்தையை பயன்படுத்துபவர்கள். இது பெண்களுக்கு பிடிக்காத விஷயங்களில் ஒன்றாகும். இதனால் இந்த உறவை முறித்துக் கொள்ள பெண்கள் விரும்புவர்.

பல்வேறு பெண்களுடன் தொடர்புடைய ஆண்களை கண்டால் பெண்களுக்கு பிடிக்காது. இவர்கள் அலைபாயும் எண்ணம் கொண்டவர்களாகவும், உறவு முறையின் முக்கியத்துவம் குறித்து அறியாதவர்கள் ஆகவும் இருப்பது தான் காரணம். வெகு சிலர் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டும் பழகுகின்றனர் என பெண்கள் நினைப்பார்கள். இதன் காரணமாக இந்த உறவானது முடிவிற்கு வரும்.

மேலும், சில ஆண்கள் ஆணாதிக்கத் தனமாக நடந்து கொள்வது பெண்களுக்கு அவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். ஆண்களுக்கு பெண்கள் இணையாக முடியாது என நினைக்கும் ஆண்களால் பெண்களை புரிந்துகொள்ள முடியாது. இப்படிப்பட்ட மேலாதிக்க குணம் கொண்டவர்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. எனவே, ஆதிக்கம் செலுத்த நினைக்கும் ஆண்கள் என தெரிந்தால் சற்றும் யோசிக்காமல் பெண்கள் விலகி விடுவர்.

குடிப்பழக்கம் இருக்கும் ஆண்களை அறவே பிடிக்காது. எப்போதாவது குடிப்பவர்களை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், தினமும் குடித்து வாழும் ஒருவரை பெண்கள் வெறுக்க துவங்குவார்கள். அப்படிப்பட்டவர் உடன் வாழ்நாள் முழுதும் சந்தோஷமாக இருக்க முடியாது என பெண்கள் கருதுவதே இதற்குக் காரணம்.

எவர் மிகவும் சுயநலத்துடன் இருக்கின்றார்களோ அவரின் காதல் நிச்சயம் நிலைக்காது. எப்போதும் தன்னை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் ஆணை எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும். எனவே, இத்தகைய ஆண்களுடன் பெண்கள் இருக்க விரும்பமாட்டார்கள்.

அடுத்ததாக தன்னுடைய தேவையை பைனான்ஷியல் ரீதியாக பூர்த்தி செய்யாத ஆண் அல்லது தன்னிடம் இருந்து பணம் வாங்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்காது. ஏனென்றால், காலம், காலமாக ஆண் சம்பாதித்து பெண் வாழ்வது தான் முறை என சிறுவயதிலிருந்து பார்த்து வளர்த்துள்ளனர்.

என்னதான் ஆண், பெண் சமம் என தான் வேலைக்கு சென்றாலும் ஆண் சம்பாதித்தியத்தில் தான் வாழ்வதை தான் பெண்கள் விரும்புவார்கள். அதற்கு தகுதி இல்லாத ஆண்களை அவர்கள் குடும்பத்திற்கு லாயக்கற்றவர்கள் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய குணம் கொண்டிருக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை.

ஒரு உறவு நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டுமெனில் சந்தேகம் என்பது இருக்கவே கூடாது. இது உறவை கொச்சைப்படுத்துவது மட்டுமல்லாமல் வெறுப்பை சம்பாதிக்கும். இந்த குணம் உள்ள ஆண்களை பெண்கள் சைக்கோவாக பார்க்கின்றனர்.

வேலைக்கு செல்வது ஒரு ஆணிற்கு அழகுதான். ஆனால், எப்பொழுதும் வேலை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் ஆணை பெண்கள் விரும்புவதில்லை.

ரொமான்ஸ் என்றால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். பல பேருக்கு ரொமான்ஸ் மற்றும் செக்சிற்கு வித்தியாசம் தெரியாமல் நடந்து கொள்வார்கள். மேற்பட்ட ஆண்களிடம் பெண்கள் இருக்க விரும்புவதில்லை. ரொமான்ஸ் என்பது சுத்தமாக இல்லாவிட்டால் இருவருக்கும் பல்வேறு சண்டைகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்தும்.

அவர்களை வெறுப்பேற்றும் வகையிலும் வற்புறுத்தும் வகையில் ஏற்படும் செயல்களை அவர்கள் விரும்புவதில்லை. இது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தனிமையில் இருப்பது ஆண் பெண் என இருவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் எப்போதும் தனியாக மட்டுமே நேரத்தை செலவிட வேண்டும் என்பது பெண்களுக்கு பிடிக்காது. பல்வேறு இடங்களுக்கு நண்பர்களுடன் செல்ல வேண்டும் என பெண்கள் ஆசை கொள்வர்.

மிகவும் கோபத்துடன் ஆவேசமாக நடந்து கொள்ளும் கொடூர குணம் உள்ள ஆண்கள் உறவிற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்ற எண்ணம் பெண்களிடம் இருக்கிறது. இத்தகைய கொடூர குணமுள்ள ஆண்கள் எவ்வளவு பாசமாக இருக்கின்றார்களோ அவ்வளவு ஆபத்தும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

பொதுவாகவே ஆண்களுக்கு பொறுப்புணர்வு, கவனக்குறைவு போன்றவை பிரச்சனைதான். ஆனால், சிலருக்கு நல்ல பொறுப்பு இருக்கும். ஆனால் மிகச் சிறிய அளவிலான இந்த பண்பை கொண்டிருப்பவர்களை பார்த்தால் பெண்களுக்கு எரிச்சல் வரும். அலட்சிய தன்மை, ஏனோதானோ என வாழும் ஆண்கள் ஆகியவர்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

அடுத்தது மிகவும் சோம்பேறி தனம். ஒரு ஆர்வம், இல்லாமல் இருப்பவர்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. எந்த விஷயத்திலும் பெண்கள் ஆர்வமாக இருக்கும் பொழுது அல்லது பேசும் பொழுதோ அதன்மீது அலட்சிய தன்மையை வெளிப்படுத்தும் பொழுது அவர்களுக்கு எரிச்சல் வரும். ஆதலால் இந்த உறவுமுறை நிலைக்காது என பெண்கள் முடிவு செய்வர்.