நடிகை திஷா பதானி பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக உள்ளார். லோபர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் கலக்கி வருகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றை கூறிய திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும், தற்போது நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக ரதே என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் நடிகர் டைகர் ஸ்ரஃப்வுடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசு எழுந்து வருகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பாகி 3 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலுக்காக உள்ளாடையுடன் உச்சக்கட்ட கவர்ச்சி நடனமாடியுள்ளார் நடிகை திஷா பதானி.