பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்புவது தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல், நிகழ்ச்சிகளை தான். அதிலும் ரியாலிட்டி ஷோக்கள், காமெடி ஷோக்கள் என்றாலே அனைவரும் இணைந்து பார்ப்பதுண்டு. பல தொலைக்காட்சிகள் போட்டிபோட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதில் முக்கியம் வகித்து வரும் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று சூப்பர் மாம் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது. அதில் தொலைக்காட்சி சீரியல் நடிகைகளும் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவார்கள்.
பல இக்கட்டான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அதை குழந்தைகள் தங்கள் அம்மாக்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்கள். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை நீபா கடந்த வாரம் நடந்த டாஸ் ஒன்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானார்.
தண்ணீர் நிறைந்த பள்ளத்தின் உள்ளே இடைவெளிவிட்டு பேரல்களை தாண்டும் டாஸ்க்கில் எகிரி விழுந்த நீபா தவறுதலாக பேரல்களில் விழுந்து தண்ணீருக்குள் விழுந்தார். இதனால் நீபாவிற்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். தன் மகள் இதனை பார்த்து பதறிபோய் கத்தியுள்ளார்.
உடனடியாக அங்கே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நீபாவிற்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனால் இந்நிகழ்ச்சியில் நீபா தொடர்ந்து விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
https://www.facebook.com/watch/?t=235&v=701915053945407