திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?

திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 7ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். திமுகவை 43 ஆண்டுகளாக பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது அன்பழகன் மறைவால் திமுகவில் பொதுச்செயலாளர் காலியாக உள்ளது.

இந்த பதிவில் யார் வரப் போகிறார்கள் என திமுகவில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் ஒருவரை உடனடியாக தேர்ந்தெடுக்கவேண்டும். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல் மூலமாக நிரப்பப்பட வேண்டும்.

தற்போது திமுகவில் உட்கட்சி தேர்தல் தொடங்கியுள்ளது. இதனால் இதற்கு முன்பாகவே பொதுக்குழுவைக் கூட்டி பொதுச் செயலாளரை தேர்ந்து எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அன்பழகன் மறைவை ஒட்டி திமுகவில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்பிறகு பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் யார் என்பதை அறிவிப்பார்கள். தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு திமுகவில் போட்டி அதிகரித்துள்ளது திமுகவின் சீனியரான துரைமுருகன், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் அமரும் அளவுக்கு உள்ளவர் துரைமுருகன் தான். ஆகையால் துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதை எடுத்து துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவி காலியாகும். இப்பதவிக்கும் பலர் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக எ.வ.வேலு, பொன்முடி, கே.என்.நேரு, ராசா, டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் குடும்பத்துடன் நெருக்கமான நபராக இருப்பவர் எ.வ.வேலு, ஆகையால் அவருக்கு பொருளாளர் பதவி கொடுக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து உட்கட்சி தேர்தல் தொடங்கியதிலிருந்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.