கொரானா தாக்கத்தால் காரணமாக பங்கு விலைகள் குறைந்ததால் ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தில் இருந்து, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
முகேஷ் அம்பானியின் பங்கு விலைகள் சரிந்ததால் சுமார் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது சொத்து மதிப்பு சுமார் 3 லட்சத்து 14 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், 3,33,750 கோடி ரூபாய் மதிப்புடன் சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மா ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வரை ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்த வந்த அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மா அந்த இடத்தை ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியிடம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.