திருமணம் முடிந்த தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு தங்களின் சந்ததியை பெருகுவதும், வாழ்நாளுக்கான இல்லறத்தின் துவக்கத்தை துவங்கி வைப்பது வழக்கமான ஒன்றாகும். இவ்வாறாக தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது சுத்தம் என்பது அவசியமான ஒன்றாகும்.
சுத்தமில்லாத மற்றும் அவசர போக்கில் தாம்பத்தியம் மேற்கொள்ளும் பட்சத்தில் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. தாம்பத்தியம் மூலமாக பரவும் நோய்களை ஆங்கிலத்தில் STD (Sexually Transmitted Diseases) என்றும், RTI (Reproductive Tract Infections) என்றும் கலவிக்கான மருத்துவர்கள் கூறுவார்கள். சிலர் தங்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தை வைத்தே எதோ நோய் வந்துவிட்டதோ? என்று அச்சப்படுவதும் உண்டு (இது திருமணம் முடியாத நபர்களுக்கும் பொருந்தும்).
ஆண்களை பொறுத்த வரையில் ஆணுறுப்பின் பின் பக்கத்தில் சிறுசிறு கட்டிகள் இருப்பது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இது ஆணுறுப்பு மற்றும் விந்துப்பை தொங்கும் தசை நார்களின் மூலமாக ஏற்படும் என்பதால் தேவையற்ற அச்சம் வேண்டாம். மேலும், விரைப்புபுற்றுநோய் ஆண்களை தாக்கும் அபாயம் மிகவும் குறைவாகும்.
தம்பதிகளில் ஒருவருக்கு பாலியல் ரீதியான தொற்று இருந்தாலோ அல்லது தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது பாதுகாப்பற்ற முறையில் தாம்பத்தியம் மேற்கொண்டால் ஆணிற்கு இரண்டு நாட்கள் முதல் 5 நாட்களுக்குள் கொனோரியா மற்றும் கிளமிடியா போன்ற நோய் ஏற்பட்டு ஆரம்பகட்ட அறிகுறியும் வெளிப்படும். இந்த பாதிப்பு மூன்று வாரத்திற்கு பின்னரும் வெளிப்படலாம்.
கொனோரியா மற்றும் கிளமிடியா நோய்கள் இருப்பதை அறிந்து கொள்ள சிறுநீர் வெளியேறும் நேரத்தில் அதிகளவு வலி மற்றும் ஆணுறுப்பில் வலியுடன் கூடிய வீக்கம் போன்றவை ஏற்படும். ஆணின் பிறப்புறுப்பில் மரு மற்றும் புண்கள் ஏற்பட்டு, சில வரத்திற்குள்ளாகவே தோலில் சிவப்பு நிற மாறுபாடு தோன்றும் பட்சத்தில் மேகபுண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த மேகப்புண் இருபாலருக்கும் பொருந்தும். பாக்டீரியாவின் மூலமாக ஏற்பட்டுள்ள தொற்றால் ஏற்படும் மேகப்புண்ணை துவக்கத்திலேயே கண்டறியும் பட்சத்தில் சிகிச்சை செய்து சரி செய்துவிடலாம்.
தாம்பத்தியத்தில் ஆண் பெண் இணைப்பு புணர்ச்சியின் போது யோனிக்குழாய்யானது அதிகளவு பாதிப்படைகிறது. இதில் தொற்றுகளால் பதிப்பட்ட விந்தணு மற்றும் ஆணுறுப்பின் புணர்ச்சி உச்சக்கட்டத்திற்கு பின்னர், விந்தணு நீண்ட நேரம் கர்ப்பப்பை மற்றும் சினைக்குழாய், சினைப்பையில் தொற்றுக்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்று கலவிக்கான மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்களின் பிறப்புறுப்புகளில் ஏற்படும் தொற்றுகள் கவனிக்க வாய்ப்புகள் பெருமளவு சாத்தியமானது இல்லை. பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகள் பாதிப்பு பெண்களை நேரடியாக பாதிக்காமல், நீண்டகால வயிற்றுவலி மற்றும் முதுகு வலி போன்ற பிரச்னையை ஏற்படுத்துகிறது. நீண்டகால வயிற்று வலி மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சனை இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
பெண்ணிடம் கொனோரியா மற்றும் கிளமிடியா பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அடிவயிற்று வலி, சிறுநீர் அடிக்கடி கழிக்கும் பழக்கம், மாதவிடாய் தொடர்பான பிரச்சனை மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றவை காணப்படும். இதனைப்போன்று யாஸ் நோய் மற்றும் பரங்கி நோய் போன்றவை ஒருவகை பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோய் ஆகும். இந்த நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, பிறருக்கு பாதிக்கும் தன்மை கொண்டதாகும்.
எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் Human Immunodeficiency நோயானது வைரஸின் மூலமாக ஏற்படும். இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை செயலிழக்க செய்து நமது உடலை ஆட்கொள்கிறது. எய்ட்ஸ் நோய்த்தொற்று வியர்வை, சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவற்றில் காணப்படாது. இதனால் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நபருடன் சேர்ந்து தங்குதல், பொருளை உபயோகம் செய்தல், கழிப்பறை உபயோகம் செய்தல், கட்டியணைத்தல், எச்சில் படாமல் முத்தம் போன்றவற்றால் எச்.ஐ.வி பரவாது.
எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட நபரை கவனித்துக்கொள்ளுதல் மற்றும் குடும்பத்தினர் ஆதரவும் மிகவும் அவசியமாகும். எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் இரத்தம், சிறுநீர் மற்றும் மலம் போன்றவற்றை அகற்ற கூடாது. இதனை சுத்தம் செய்யும் போது கிளவுஸ் போட்டு சுத்தம் செய்வது பாதுகாப்பானதாகும்.
ஆண்களுக்கு செய்யப்படும் வாசக்டமி என்பது குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையில் விந்தணுக்களை வெளியே அனுப்புவதற்கு உதவும் Vas Deferens என்ற நாளம் அகற்றப்படுகிறது. இதனால் தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைவது மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படாது. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை பொறுத்த வரையில் ஆண்களை விட பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகிறது.
இந்த சிறுநீர் பாதை தொற்றுக்கு அறிகுறியாக சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் நேரத்தில் எரிச்சல் போன்றவை ஏற்படும். இதனைப்போன்று தாம்பத்தியம், தாய்மை அடைவது, சிறுநீர் வெளியேறும் வழியின் அடைப்பு போன்றவை சிறுநீர் தொற்று ஏற்பட முக்கிய காரணமாக அமையும். பெண்களின் பெண்ணுறுப்பில் மூன்று வகையான தொற்றுகள் உருவாகிறது. இதனை டிரைகோமோனஸ் கிருமித்தொற்று, ஈஸ்ட் கிருமித்தொற்று, பாக்டீரியா கிருமித்தொற்று என்று கூறுவார்கள். நமது உடலின் வெளிப்புற சுத்தம் மற்றும் சுகாதாரம் போல, நமது உடலின் அந்தரங்க உறுப்புகள் பிறப்புறுப்புகளின் சுத்தமும் கட்டாயம் அவசியமான ஒன்றாகும்.