விஷால் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு தேதி குறித்த நீதிபதி.!

கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்தது. அதுமட்டுமில்லாமல் புதிதாக தேர்தலை நடந்த வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையிடு செய்திருந்தார்.

விஷால் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது, அப்போது நடிகர் சங்கத்திற்கு புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

மேலும், நடிகர் சங்கத்திற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடவும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும் இடைக்காலத்தடை வித்ததோடு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்து செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி.

விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.