பிரபல நடிகர் ஆர்யாவின் மிரட்டும் டெடி டீசர்

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மிருதன், டிக்டிக்டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷக்தி சவுந்தர்ராஜன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது டெடி படத்தின் டீசர் வெளியானது. பேசும் டெடி பியர் பொம்மையுடன் சேர்ந்து கலாட்டா செய்யும் ஆர்யாவும் மிகப்பெரிய மாஃபியா நெட்வொர்கையும் இணைத்து இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.

தடையற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேணி இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.