தமிழ் திரையுலக இயக்குனர்களில் மிக முக்கியமான ஒரு இயக்குனர் மிஸ்கின். இவர் எடுக்கும் படங்களில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு தான் எடுப்பார்.
இவர் எடுத்து வெளியிட்ட பல திரைப்படங்கள் தமிழ் திரையுலகத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
மேலும் சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்து தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் சைக்கோ.
இப்படத்தின் வெற்றியை பல நாட்களுக்கு பிறகு ஒரு படத்திற்கு கிடைத்த மிக சிறந்த வெற்றி என்று ரசிகர்கள்
கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் எடுக்கும் அடுத்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க போவதாக சில தகவல்கள் கசிந்திருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு நடிக்க போவதாகவும் சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த செய்தியை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.