கவின் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சரவணன் மீனாட்சி சீரியல் தான். வேட்டயன் என எல்லோராலும் இரண்டாம் சீசனில் கொண்டாடப்பட்டார்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்த அவர் கடந்து வருடம் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று இறுதி சுற்றுக்கு முன் தானாகவே வெளியேறிவிட்டார்.
அபிராமி,சாக்ஷி, லாஸ்லியா என காதல் சர்ச்சைகளில் அவர்களுடன் இவர் சிக்கினாலும் அவருக்கென கவின் ஆர்மி துடிப்பாக செயல்பட்டு வருகிறது.
அண்மையில் அவர் அடுத்ததாக ஒரு படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வந்தது. இந்நிலையில் அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் கேப்டன் தென்றலாக நடித்த அம்ரிதா தான் நடிக்கிறாராம். மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினீத் என்பவர் இயக்கி தயாரிக்க, படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.