பிரித்தானியாவும் அடுத்த சில வாரங்களில் இத்தாலி போன்று முழுமையாக இழுத்து மூடப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியா தற்போது வட இத்தாலியின் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள பேராசிரியர் பிரான்கொய்ஸ் பலொக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
வட இத்தாலியின் நிலைமை பிரிட்டனின் நிலைமையை விட மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இத்தாலி முற்றாக முடங்கியுள்ள நிலை போன்று பிரித்தானியாவிலும் உருவாகலாம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவின் அரச வைத்தியர் ஒருவர் ஆயிரக்கணக்கான மக்கள் வைரசிஸ் தொற்றிற்கு உள்ளாகலாம் என தெரிவித்துள்ளார்.
எழுத்தாளரும் மருத்துவருமான அடம் கே இரண்டு வாரங்களில் பிரித்தானியா இத்தாலியின் நிலையை அடையும் என குறிப்பிட்டுள்ளார்.