மிஸ்கின் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு விஷால் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இப்படம் ஒரு டிடெக்ட்டிவ் துறையை கதைக்களமாக கொண்ட திரைப்படம்.
இப்படத்திற்கு பிரபல முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்று மிக பெரிய வெற்றியை நடிகர் விஷாலுக்கு தேடி தந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினார் இயக்குனர் மிஸ்கின்.
இதன்பின் படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்தது என்று தகவல்கள் வெளியானது. ஆனால் நடிகர் விஷலுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டினால் இப்படத்தில் இருந்து மிஸ்கின் விலகிவிட்டார் என்று பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது இதனை உறுதி செய்யும் விதத்தில் இப்படத்தின் First லுக் நாளை வெளிவரும் என்று விஷாலின் தயாரிப்பாளர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் மிஷ்கினின் பெயர் இடப்பெறவில்லை இதனால் தற்போது மிஸ்கின் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று அதிகாரபூர்வமாக தெரிவந்துள்ளது.
Here We Go !!!#Thupparivaalan2FirstLook from tomorrow #Thupparivaalan2 #Detective2 #Thupparivaalan2FL @VishalKOfficial pic.twitter.com/wGi8uXKsfe
— Vishal Film Factory (@VffVishal) March 10, 2020