இன்னும் சில தினங்களில், கொரோனா தடுப்பு மருந்து குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று இஸ்ரேல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது.
அந்த நிறுவனங்களின் விஞ்ஞானிகள் உருவாக்கிய மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளது. இதில் சில நிறுவனங்களின் ஆய்வு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் நாளிதழில் ஒன்றில் சில தினங்களில் தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என விஞ்ஞானிகள் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆனாலும் இது அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.