சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா கொண்டுவரும் மாற்றம்

ISS எனப்படும் விண்ணில் மிதந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிய மாற்றம் ஒன்றினை கொண்டுவர நாசா விண்வெளி ஆய்வு மையம் தீர்மானித்துள்ளது.

இதன்படி அங்குள்ள வீரர்களின் சிறுநீரை குடிநீராக மாற்றும் முறைமை ஒன்றினை உருவாக்கவுள்ளது.

குடிநீர் அதிகளவு எடையினைக் கொண்டிருக்கின்றமையினால் அதனை பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் காணப்படுகின்றது.

இதனையடுத்தே இந்த முடிவினை நாசா விண்வெளி ஆய்வு மையம் எடுத்துள்ளது.

இதற்காக விசேட உபகரணம் ஒன்றினை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கம் ஒன்றினூடாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.