Antutu எனும் பிரபலமான அப்பிளிக்கேஷனை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது கூகுள்.
இந்த அப்பிளிக்கேஷனானது அதிகளவான அன்ரோயிட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்பட்டுவந்தது.
அதாவது Xiaomi மற்றும் Realme உட்பட பல்வேறு அன்ரோயிட் கைப்பேசிகளில் இந்த அப்பிளிக்கேஷன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அப்பிளிக்கேஷனில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி குறித்த அப்பிளிக்கேஷனை உருவாக்கிய Cheetah Mobile நிறுவனம் தனது Antutu Benchmark, Antutu 3DBench எனும் அப்பிளிக்கேஷன்களையும் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.